Author Topic: தயிர் கத்தரிக்காய்  (Read 756 times)

Offline kanmani

தயிர் கத்தரிக்காய்
« on: October 14, 2012, 10:45:02 PM »


தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 8
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
வெங்காய பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 1/2 டீஸ்பூன்
தயிர் - 2 கப்
கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது)
எண்ணெய் - 1 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் முழு கத்தரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின் அதில் பாதி மஞ்சள் தூள், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து தடவிக் கொள்ளவும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3/4 கப் எண்ணெய் ஊற்றி, நன்கு வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். பிறகு அதே எண்ணெயில் மீதமுள்ள எண்ணெயை விட்டு காய்ந்ததும், வெங்காய பேஸ்ட், இஞ்சி பூண்டு விழுது, சிறிது உப்பு மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

பின் அதில் மிளகாய் தூள், மீதமுள்ள மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து, 2-3 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

பிறகு தயிரை அதில் ஊற்றி, நன்கு காரம் அனைத்தும் தயிரில் சேரும் வரை சிறிது நேரம் கொதிக்க வைத்து, பின் அதனை இறக்கி, வறுத்து வைத்துள்ள கத்தரிக்காயுடன் சேர்க்கவும்.

இப்போது சூப்பரான தயிர் கத்தரிக்காய் ரெடி!!! அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும். அதிலும் இதனை சாதம் அல்லது ரொட்டியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.