இன்னொரு பிறவி வேண்டும்
உன் மனதோடு போரிட்டு வெற்றி பெற,
நகல்களாய் நகரும் இந்த பிறவியின் நினைவுகளை நிஜமாக்க ,
முகம் சுளித்து செல்லும் உன் உதடுகளின் ஓரம் என் பெயரின் உறக்கத்திற்காக ...
அகம் புதைத்த என் உணர்சிகளுக்கு உயிர் குடுக்க ...
காகித கறைகளாய் தோன்றும் என் கவிதை எல்லாம்
உன் விழிபட்டு என் காதலை உணர்த்த ,
விரட்டி அடிக்கும் உன் விழிகளில் விலகாத பிம்பமாய் நிறைந்திட
உன்னை நினைத்து நினைத்து நிமிடங்களை நகர்த்த ,
நேசித்து நேசித்து நெஞ்சுருகி , நினைவடக்கி
நிறைபெறும் என் வாழ்க்கையின் வரிகளை உன்னை நிரப்ப,
உன் விரல் பிடித்தே என் உயிர் பிரிய வேண்டுமடி "இன்னொரு பிறவி ...." உன்னோடு விலகாமல் .....