Author Topic: ஏன் இத்தனை கடுமையோ ?  (Read 500 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
ஏன் இத்தனை கடுமையோ ?
« on: October 04, 2012, 05:38:09 PM »
கவிதையே !

என் கவிதைக்காதலியே !

உன் பெயர் , எண்ணம்,பதிப்பு
செயல், செயற்பாடு ,அணுகுமுறை,பேச்சு,
என ஒவ்வொன்றும் இனிமையாயிருக்க
தனிமை பொழுதுபார்த்து தாக்குதல் புரியும்
நினைவுகள் மட்டும் எப்படி
எதிர்மறையாய் ?

"லேடி காகா" வினை பின்தொடரும்
30 கோடி "டுவிட்டர்களை"போல்
அனுதினமும் உன் நினைவுகளையே
நிதம்நிதம் பின் தொடரும்
என் மனதின் மீது
ஏன் ?? இத்தனை கடுமையோ ?

ஒருவேளை, கரைக்காதலியை காண
காலகாலமாய் தொடர்ந்து முயற்சிக்கும்
அலைக்காதலன் போல்
இவனில்லை என்பதாலோ ??