உனக்காக வரி சமைக்க அமர்ந்துவிட்டால்
நான் படும் சிரத்தையினை சொல்லி மாளாது
இருந்தும், நீ அறிந்து கொள்ள இதோ உதாரணத்திற்கு ...
வெறும் 150 பணியடத்தை நிரப்ப
12000 பட்டதாரிகளை நேர்க்கானலுக்கு அழைத்து
தேர்வெழுத வைப்பது போல
100 க்கும் குறைவான வரிகளை பதிக்க
15000 வார்த்தைகளை அலசி ஆராய்ந்து
பரிசீலித்து படுசிரத்தையோடு வரி சமைப்பேன் ..