Author Topic: அன்புள்ள அம்மா  (Read 649 times)

Offline viswa

அன்புள்ள அம்மா
« on: September 30, 2012, 01:48:32 PM »
அன்புள்ள அம்மா ,
கடவுளின் மடியில்
விளையாடிக் கொண்டிருந்தேன்.கோவிலைக் காண்பிப்பதாகச் சொல்லி ,என்னை ,உன் கருவறைக்குள் பிரவேசிக்கச் செய்தார் , கடவுள் !
இருட்டாக இருந்தாலும் ,இதமாக இருந்தது இந்தப் புதிய இடம்..முதலில் பயமாக இருந்தாலும் ,பிறகு சந்தோஷமாக வளரத் தொடங்கினேன் !
நீ சிரிக்கும் பொழுது ,நானும் சிரித்தேன்..நீ அழும் பொழுது ,நானும் கண்ணீரில் ...
பிறகு தான் புரிந்தது
நம்மிடையே ஒரு புது உறவு மலர்ந்தது என்று ...ஆமாம்
நீ என் அம்மா ! :)