Author Topic: காதல் செய்தது துரோகம்...  (Read 2056 times)

Offline JS

காதலை நேசித்தேன்
காதலின் செயலால்
என்னை உணர்ந்தேன்...

காதலிலாமல் நான் இல்லை என்றேன்
காதலுக்காக என்னை அர்ப்பணித்தேன்
காதலே நிம்மதி என்றேன்...

காலத்தின் வேகத்தால்
காதலை மணந்தேன்
அது கொண்ட அன்பினால்
நான் என்னை மறந்தேன்...

காலச் சக்கரம் சுழல
எனக்குரியவனை அறிந்தேன்
சிறிது தாமதமாக...

ஏற்கத் தொடங்கினேன் துயரத்தை
வெம்பினேன் மனது தாங்கவில்லை
நான் செய்த பாவம்
காதல் செய்தது துரோகம்...
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

Re: காதல் செய்தது துரோகம்...
« Reply #1 on: August 16, 2011, 09:13:10 PM »
Quote
ஏற்கத் தொடங்கினேன் துயரத்தை
வெம்பினேன் மனது தாங்கவில்லை
நான் செய்த பாவம்
காதல் செய்தது துரோகம்...

 :(