Author Topic: காதல் ஒரு களிமண்  (Read 779 times)

Offline thamilan

காதல் ஒரு களிமண்
« on: September 24, 2012, 02:43:51 PM »
காதல் ஒரு களிமண்
அதை பிள்ளையாராக பிடிப்பதும்
குரங்காய் பிடிப்பதும்
 பிடிப்பவர் கையில் தான்

அனேகம் பேர்
குரங்கை பிடித்து விட்டு
அய்யோ களிமண் குரங்கு என
புலம்புவது ஏன்

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 36
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: காதல் ஒரு களிமண்
« Reply #1 on: September 24, 2012, 02:48:12 PM »
இருட்டில் பிள்லையார் பிடிக்க போய் குரங்கானது என்று ஊர்ப்பத்தில் சொல்வார்கள்

காதலுக்கும் அது பொருந்திவிடுகிறது

காதலுக்கு கண்ணில்லை

காதல் கண்ணை மறைக்கிறது என்று சொல்கிறார்கள் இல்லையா

அப்படியானால், பார்வையிழந்த நிலையைத்தான் இந்த வாசகங்களும் குறிக்கின்றன‌

காதல்கள் பிடிக்கும் பிள்ளையார் குராங்கிவிடுகிறது

டு இன்டு டு இன்டு டு = டுட்டுடு :D

பாராட்டுக்கள்
அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 602
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: காதல் ஒரு களிமண்
« Reply #2 on: September 24, 2012, 04:05:42 PM »
வாட் டு டு எண்ண டு விடுறேங்க எல்லாம் ...

தமிழன் அப்படிதான் எட்டாதா காய் புளிக்கும் என்றத போலதான் ... இந்த காதலில் பிள்ளையார் பிடிக்க போய் குரங்கு ஆகுது.. ஆனா ஒன்னு கண்ணன் பிடித்து பாருங்கள் சரியாய் வரும் பிள்ளையார் பிரமச்சாரி .. காதலுக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை போல அதனால் அவர் வேணும் என்றே குரங்கு ஆக்கி இருக்கலாம் .. ஹிஹி
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 36
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: காதல் ஒரு களிமண்
« Reply #3 on: September 24, 2012, 04:15:22 PM »
வட இந்திய இதிகாசங்கள் படி பிள்ளையார்க்கு இரு மனைவி, முருகன் தான் இங்கு ஆண்டி

சோ நாங்க வட இந்திய பிள்ளையாரைத்தான் பிடிச்சோம்

தென்னிந்திய பிள்ளையார் கருப்பா இருப்பார் மாமை நிறம்

வட இந்திய பிள்ளையார் வெள்ளையா இருப்பார் மாவு நிறம்

:D :D :D
அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 602
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: காதல் ஒரு களிமண்
« Reply #4 on: September 25, 2012, 12:09:42 AM »
அட பாவிங்கள ... சித்தி புத்தி  என்ற பெண்களைத்தானே சொல்கின்றீர்கள் ... பிள்ளையாருக்கும் சோடி சேர்துடாங்க