Author Topic: மனதில் உறுதி வேண்டும்  (Read 493 times)

Offline Anu

மனதில் உறுதி வேண்டும்
« on: September 21, 2012, 01:02:02 PM »
மனதில் உறுதி வேண்டும் - பாரதியே
எங்கள் மனதில் உறுதி வேண்டும்
சிந்தனையில் தெளிவும் வேண்டும்
உன்போல் உணர்ச்சி மிகு
கவி எழுதும் திறமை வேண்டும்!!!!

நன்மை செய்யும் பண்பு வேண்டும்
தீமையை அறவே ஒழித்திட வேண்டும்
அநீதியை தட்டிக்கேட்கும் துணிவு வேண்டும்
ஏழைகளுக்கு உதவும் கருணை வேண்டும்!!!!
பொய்மை இல்லா உலகம் வேண்டும்
மெய்மை எங்கும் நிறைந்திட வேண்டும்
பெரியோரை மதிக்கும் பண்பு வேண்டும்
முதியோரை அரவணைக்கும் பாசம் வேண்டும்!!!!

போராட்டம் இல்லாத வாழ்வு வேண்டும்
நேர்மையான ஆட்சி நடக்க வேண்டும்
சமாதானம் எங்கும் நிலவ வேண்டும்
இயற்கையும் சாதகமாக வேண்டும்!!!!