//சிறு கோடாய்
கடலின் சமாந்தரதுள்
சிறுக அமிழும் சிவந்த சூரியன்
ஒரு கோடாய் நிலவின் வரவை
உறுதி செய்ய இருளை பகிர்ந்தான் ....
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அலையாடும் படகோடு
அலைந்தாடும் நிலவொளி கடல்தனில்...
//
சிறப்பான காட்சிப்பதிவு, கவிஞரின் கண்ணொரு கேமிரா என்பதற்கு மேலும் ஒரு சான்று
//கரைக்கும் அலைக்கும்
கடலுக்கும் எனக்கும்
இடைவெளி சிறிது தான் ...
இருந்தும் அனைத்தையும் ரசித்தேன் ..//
சட்டென கவிதையை அடுத்த தளத்துக்கு ஆயத்தம் செய்யும் வரிகள்
//நினைவுக்குள் புகுந்து
நிகழ்வுகளில் தாகம் செயும்
அவன் நினைவுகளை
இந்த அலைதனில் கழுவ முடிந்தால்
காலம் முழுமைக்கும்
கடலுக்கு நான் கடமைபட்டவள் .//
கையறு நிலையை கச்சிதமாய் உரைத்திருக்கும் வரிகள்
உங்கள் கவிதைகளில் நான் அதிகம் ரசித்திருப்பது சங்க இலக்கியம் போல இரு இயற்கை சூழலையும், குறியீடுகளையும் உருவாக்கி அதனையும் கவிதையின் சூழலை, கருவை, உணர்வை பேச விடும் திறம் தான்
இந்த திறனை கெட்டியா பிடிச்சுக்கோங்க