Author Topic: காரணம் கூற வா..  (Read 528 times)

Offline supernatural

காரணம் கூற வா..
« on: September 12, 2012, 11:39:08 AM »
அப்படி ஏதும்
மேன்மை இல்லை
என்னிடம்

ஓங்கும் அளவினில்,
ஆழ் கடலினை,
கடந்திடும்  அளவில்லா
மெய் காதலினை
தவிர்த்து .

காதலித்துப்பார்,
என்றென் எழுத்துலகாசான்
எப்போதிருந்தோ,
எடுத்துரைத்தபோதும்
ஏடெடுத்து மட்டும்
பார்த்தேனே தவிர ,
ஏறெடுத்து பார்த்ததில்லை
காதலினை .

இன்றோ
நேரெதிரே பார்க்காதே
ஆண்டவனை  காதலிக்கும்
ஆத்திகர்போல
பெரியாரை காதலிக்கும்
நாத்திகர் போல
பெரிதாக காதலிகின்றேன்
உன்னை .

காரணமாய் ,
யாதுண்டென ,கூறிடவே
கோரிடுவோர் ஊரினிலே
பலருண்டு

என்னென்று சொல்லிடுவேன்
காரணத்தை ?
ஒன்றிரண்டு உண்டானால்
சொல்லிடலாம்

உச்சிமுதல்  பாதம்வரை
ஒவ்வொன்றாய், மனம்வருடி ,
தினம் திருடிடும் ,
காதல் காரணங்கள்
நூருண்டு

கேள்வி எழுந்துவரும்
திசை அது ,நீ
வரும் திசையானால் ,பதிலை
தருவதர்க்கிசைவே
தருவே ! திருவே !
« Last Edit: September 12, 2012, 02:28:05 PM by supernatural »
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!