கார்கால பொழுதில்
என் கனவு சொன்ன தூதை
என்னவென்று நான் சொல்ல....
இமையோரம் உன் நினைவில்
என் இதயம் வாழும் நிலையை
என்னவென்று நான் சொல்ல ....
நீ இருக்கும் திசையில்
என் நினைவிருக்கும் நிலையை
என்னவென்று நான் சொல்ல ..
உறங்காத என் விழிகள்
உன்னை தேடும் தவிப்பை
என்னவென்று நான் சொல்ல ..
யாரோவென்று உனைப் பார்த்தபோது
நீயெனக்கு அனைத்துமாகி போன கதையை
என்னவென்று நான் சொல்ல ...