தெருவோரம் நிக்கும்
பழுதான வண்டி போல்
உன் மனதோரம்
நிக்கும் பாழான இதயம் இது ...
உன் நகர்வுகளை
கண்களால் படம் பிடித்து
மனவறையில் ஒளிப்படமாக்கி
மாட்டி வைத்து மடிந்து கொண்டிருக்கின்றேன் ..
காலத்தின் கழுகு பார்வையில்
அகப்பட கோளிகுஞ்சானேன்..
குறு குறுக்கும் பார்வைகளும்
குதறும் கேள்வி கணைகளும்
குடிக்கிறது நின்மதி என்னும் ஆத்மாவை ..
எங்கோ ஒரு மூலையில்
என்னை சுவாசிப்பதாய்
என்னை நேசிப்பதாய் சொல்லும் நீ
நாளை மணாளனாகிறாய்
நம் காதல் மரணத்தை உறுதி செய்தபடி ..
உன்னிடம் ஒரே கேள்வி
உன்னை நேசிக்கும் என்னை விட
நாளை நீ பூஜிக்கும் பெண்மை சிறந்ததோ ...?
என்னை சிறகொடித்து போகும் உன்னை
மரண தருவாயிலும் தேடும் மனது ..
வாழாத என் வாழ்வுக்கும் சேர்த்து
நீயே வாழ்ந்து விட்டு போ ...
வாழ்த்துகளுடன் என்றும் உன்னவள் ..