Author Topic: ஏதோ சொல்ல வந்தேன்...  (Read 2020 times)

Offline JS

ஏதோ சொல்ல வந்தேன்...
« on: August 12, 2011, 03:44:20 PM »
உன் அருகில் நானா !!...
மீறித் தான் போவேனா...
என் வாசலை தாண்டினேன்
உன் இலக்கணம் ஆனேன்

உருக்கி வைத்து வெண்ணெயை
உருக்காமலே கொள்ளை கொண்டவனே !
உன்னிடம் கொண்ட காதல்
ஏனோ ஆறுதலாக வெளிவந்தது...

ஏற்றுக்கொள்ளாத போது ஏளனமாடியது
ஏற்றுக்கொள்ளும் போது மோதியது
எனை ஈர்த்த உன் காதல்...
என்றும் பாயும் என் காதில்...

முள்ளில்லாத ரோஜாவாக ஆனேன்
உன் அறிமுகத்தினால்
கண்ணோடு உறவாடினேன்
உன் பார்வையினால்...

என்னை காக்க வந்த தேவனே
ஏதோ சொல்ல வந்தேன் உன்னிடம்
வார்த்தை இல்லை என்னிடம்...!!
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

Re: ஏதோ சொல்ல வந்தேன்...
« Reply #1 on: August 12, 2011, 07:28:54 PM »
Quote
முள்ளில்லாத ரோஜாவாக ஆனேன்
உன் அறிமுகத்தினால்
கண்ணோடு உறவாடினேன்
உன் பார்வையினால்

இனிமையான கவிதை