Author Topic: மோகம்  (Read 691 times)

Offline Global Angel

மோகம்
« on: August 30, 2012, 04:41:25 PM »


நிலவொளுகும் நீள்வானும்
தன் நிலை உருகும் இராக்காலம்
மனதருகே நீ
மனச்சுவர்களில் சாய்ந்தவண்ணம்
மோகனமாய் உதிர்க்கும் புன்னகை
மல்லிகையின் நறுமணத்தை விஞ்சி
என் மனதுள் மணம கமழ செய்யுதடா ...


செவ்விதழ் தான் தொட்டு
வரிசங்கு கழுத்தாரம் பட்டு
தோளது தான் விரவி
மலர் கரம் சேரும் போது
மது கொண்ட மலராய்
உன் நெஞ்ச மஞ்சத்தில்
மடி கொள்ளும் என் சிரசும் ...


ஏக்கங்கள் எம்பி குதிக்க
எண்ண ஓட்டங்கள் ஒலிம்பிக் பதக்கம் வெல்ல
அதன் தாக்கங்கள் இதய ஒலியில் தடதடக்கும் ...
மனம் கெஞ்சும்  மேலும் மதுவுக்காய்
மதி கொஞ்சும் விடுதலைக்காய்
கொடி இடை தாங்காது
கொழுகொம்பாய் உன்னை பற்றும் ..


எண்ணகளில் வண்ணமாய் நீ ஆழ
ஏக்கம் தேக்கும் என் தனிமை நினைவுகள் ...
தொலைவினில் இருந்தாலும்
நிலவினில் நீ தெரிவாய்
அமாவாசைகளை இருட்டடிப்பு செய்தவண்ணம் ...
« Last Edit: August 30, 2012, 05:23:09 PM by Global Angel »
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: மோகம்
« Reply #1 on: August 30, 2012, 06:33:31 PM »
//செவ்விதழ் தான் தொட்டு
வரிசங்கு கழுத்தாரம் பட்டு
தோளது தான் விரவி
மலர் கரம் சேரும் போது
மது கொண்ட மலராய்
உன் நெஞ்ச மஞ்சத்தில்
மடி கொள்ளும் என் சிரசும் ...

//

//மனம் கெஞ்சும்  மேலும் மதுவுக்காய்
மதி கொஞ்சும் விடுதலைக்காய்
கொடி இடை தாங்காது
கொழுகொம்பாய் உன்னை பற்றும் ..

//

இதமான வரிகள்

//எண்ண ஓட்டங்கள் ஒலிம்பிக் பதக்கம் வெல்ல
//

எண்ணவோட்டங்களுக்கு பொருத்தமான படிமம், மிக நன்று

//தொலைவினில் இருந்தாலும்
நிலவினில் நீ தெரிவாய்
அமாவாசைகளை இருட்டடிப்பு செய்தவண்ணம் ...
//

அருமை

நிலவும், வானமும் அதிகமாய் பிடிகுமோ, தொடர்ந்து அதிகமாய் அவை தங்களின் கவிதைகளின் பயன்படுத்த காண்கிறேன்
அன்புடன் ஆதி

Offline Global Angel

Re: மோகம்
« Reply #2 on: August 30, 2012, 06:42:12 PM »


நிலவு வானம்  இது எப்பவுமே ரம்மியமான காட்சி ... அமைதியான மனதை கவரும் ஒளிப்படிமம் .. நம்ம மன நிலைக்கு ஏற்ற போல அது தோற்றம் அளிக்கும் நீங்களும் அப்போ அப்போ வெவ்வேறு மன நிலையில் நிலவையும் வானத்தையும் பாருங்கள் புரியும் ஹிஹ

நன்றி ஆதி