Author Topic: ~ பூசணிக்காய் பொரியல் ~  (Read 837 times)

Offline MysteRy

~ பூசணிக்காய் பொரியல் ~
« on: August 27, 2012, 08:51:35 PM »
பூசணிக்காய் பொரியல்



தேவையான பொருட்கள் :
மஞ்சள் பூசணிக்காய் – 1/2 கிலோ
வெங்காயம் – 1
நாட்டு தக்காளி – 2
பச்சைமிளகாய் – 4
கடுகு – 1/4 டீஸ்பூன்
மிளகாய்தூள் – 1/2 டீஸ்பூன்
தேங்காய் – 1/4 மூடி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :
முதலில் பூசணிக்காய், வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பின் பச்சை மிளகாயை நீளமாக கீறிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் நறுக்கி வைத்திருக்கும் பூசணிக்காயை போட்டு சிறிது நேரம் பிரட்டி, மிளகாய் தூள், உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து, தட்டை வைத்து மூடி வேக வைக்கவும்.

காயானது வெந்து, தண்ணீரானது வற்றியதும், அதனை இறக்கி விடவும். பின் அதன் மேல் துருவிய தேங்காயைத் தூவி, கிளறி விடவும்.
இப்போது சுவையான பூசணிக்காய் பொரியல் தயார்!