தோல்வியை கண்டால்
துவண்டுவிடுவது ஏன்
தோல்வி
நம்மை நாமே
பார்த்துக் கொள்ள உதவும்
கண்ணாடியல்லவா
தோல்வி
மனிதனை செதுக்கும்
பரிணாமச் சிப்பியல்லவா
தோல்வி
வாழ்க்கை போராட்டத்துக்கு
ஆயுதங்களை தயாரித்து தரும்
உலைக்களமல்லவா
தோல்வி
மனிதனை புடம் போட்டு
ஒளிரச் செய்யும்
நேசநெருப்பல்லவா
தோல்வி
மனிதனை கூராக்கும்
சாணைக்கல் அல்லவா
தோல்வி
புயலயே படகாக மாற்ற
பாடம் சொல்லித்தந்த
உண்மையான ஒரு பள்ளிக்கூடம்
தோல்வி
சுட்டுத் துளைத்ததால் தானே மனிதன்
புல்லாங்குழல் ஆகிறான்
தோல்வி ஒரு இழப்பல்ல
அதால் நாம் பெறுகிறோம்
வெற்றி ஒரு போதை
அதால் நாம் இழக்கிறோம்