Author Topic: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கைந்து குழந்தைகள் ஒரே நாளில் உயிரிழப்பது ஏன்?  (Read 5592 times)

Offline Global Angel


வடமாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் 6 குழந்தைகள் (5 ஆண், ஒரு பெண்) ஒரே நாளில் வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர். இதில் முதல் குழந்தைக்கு வயது 15. கடைசியாகப் பிறந்த பெண் குழந்தைக்கு 3 மாதமே ஆகிறது. ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்து, ஒரு கட்டத்தில் அனைத்து குழந்தைகளும் ஒரே நேரத்தில் உயிரிழப்பது எதனால்?

பதில்: என்னிடம் வந்த சில ஜாதகத்தில், நீங்கள் கூறியது போன்ற அமைப்பு உடையதை ஆய்வு நோக்கில் எடுத்து வைத்துள்ளேன். வீடு இடிந்து விழுவதால் மட்டுமின்றி, சாலை விபத்துகளிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழக்கின்றன.

ஒரு குடும்பத்தில் உள்ள தம்பதிகளுக்கு (கணவன், மனைவி இருவருக்கும்) ஏழரை அல்லது அஷ்டமச் சனி, குழந்தைகளுக்கு பாதச் சனி/அர்த்தாஷ்டம சனி/ஏழரைச் சனி நடக்கும் காலத்தில் மேற்கூறியது போன்ற அசம்பாவிதம் ஏற்படக் கூடும். அதுபோன்ற காலகட்டத்தில் குடும்ப சகிதமாக வாகனங்களில் செல்ல வேண்டாம் என சம்பந்தப்பட்டவர்களிடம் அறிவுறுத்துவேன்.

மேலும், குழந்தைகள் ஓரளவு பெரியவர்களாக இருக்கும் பட்சத்தில், சனியின் ஆளுமைக் காலம் முடியும் வரை அவர்களை பள்ளியுடன் கூடிய விடுதியில் சேர்த்து விடலாம். ஒருவேளை குறைந்த வயதுடைய குழந்தைகளாக இருந்தால் அவர்களை மிக நெருங்கிய உறவினர் வீட்டில் வைத்து வளர்க்கலாம்.

ஒருவேளை குழந்தையை வேறு இடத்தில் அல்லது உறவினர் வீட்டில் வளர்க்க முடியாது நிலை ஏற்பட்டால், அந்தத் தம்பதிகள் தங்களின் சொந்த ஊரை விட்டு, வேறு புதிய இடத்திற்கு சென்று குறிப்பிட்ட காலம் வரை வாழ்வது ஓரளவு பலனைத் தரும்.

எனவே, குழந்தைகளுடன் வாழும் தம்பதிகள் ஆண்டுக்கு ஒருமுறையாவது அல்லது 3 ஆண்டுக்கு ஒருமுறையாவது குடும்ப உறுப்பினர்களுக்கு என்னென்ன தசாபுக்தி நடக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு மாற்று ஏற்பாடுகள், பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும்.