Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
இரவு உணவு மோகம் ஆபத்தானது...
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: இரவு உணவு மோகம் ஆபத்தானது... (Read 317 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226669
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
இரவு உணவு மோகம் ஆபத்தானது...
«
on:
March 11, 2026, 02:53:22 PM »
காலையில் அரசனை போலவும், இரவில் ஏழையைப் போலவும் சாப்பிட வேண்டும் என்பது முன்னோர்கள் கூறிய அறிவுரை. இன்றைய வாழ்வியல் முறையில் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. காலை உணவைப் பலரும்
சாப்பிடுவதில்லை; இரவு உணவைத் தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது தவறுவதில்லை என்னும் நிலை உருவாகிவிட்டது. சரி இரவு உணவை அதிகமாக எடுத்துக் கொண்டால் விளையும் ஆபத்துகளைக் காண்போம்.
இரவு நீண்ட நேரம் கண் விழிக்கும் போது,மன அழுத்தத்தை அதிகரிக்கும் ஹார்மோன்கள் சுரக்கின்றன. மன அழுத்தத்தைக் குறைக்க ஏதாவது சாப்பிடலாமா? என்று தோன்றும். அதுபோன்ற வேளையில் இனிப்பு மற்றும் துரித உணவுகளையே மனம் விரும்பும். இதை சுகர் க்ரேவிங் என்று அழைப்பார்கள். அதாவது நேரம் தவறி ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிப்பு, தொப்பை, வளர்சிதை மாற்றங்கள், மன அழுத்தம், முடி உதிர்வு, மாதவிடாய் கோளாறுகள் போன்ற பக்க விளைவுகள் உண்டாகும்.
நூற்றுக்கு 15 சதவீதம் மக்கள் இரவு உணவு மோக நோய் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை அமெரிக்கர்களுக்கு மட்டுமே இருந்து வந்த இந்த நோய் தற்போது இந்தியர்களிடமே பெரிதாகக் காணப்படுகிறது.
இரவு உணவு மோகம் கொலஸ்ட்ரால் கூடுவதுடன் 300 கலோரி அளவில் உடலில் சேர்கிறது. நல்ல தூக்கமும் கெடுகிறது. தொப்பை இன்னும் நன்றாக வளர்கிறது. இந்நேரத்தில் அதிகம் சாப்பிட்டால் வலிப்பு நோயும் பலருக்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்
நம்மில் பலருக்கு இரவு படுத்ததும் தூக்கம் வருவதில்லை. நாம் களைப்படையும் அளவு பயிற்சி, உழைப்பு செய்திருந்தால் நாம் மிகவும் சோர்வடைந்திருந்தால் தூக்கம் நம் கண்களைத் தேடும். ஆனால் நாம் பல மணி நேரம் கணினி முன்பு அமர்ந்தே இருப்பதால் கண்கள் வறட்சி அடைந்து தூக்கம் எளிதாக வருவதில்லை. எனவே இரவு நேரம் நிம்மதியாக தூங்க வேண்டுமெனில் உடற்பயிற்சி மிகவும் அவசியம். படுக்கச் செல்லும் முன்பு தொழில்நுட்ப சாதனங்களைத் தவிர்த்து விடுங்கள். இரவு பசித்தாலும் பழ வகைகளைச் சேர்த்துக் கொள்ளவும். முருங்கை சூப், முருங்கை கீரை வகைகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆழ்ந்த தூக்கம் வரும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
இரவு உணவு மோகம் ஆபத்தானது...