நகம் கடித்து
விரலின் சதை கடிபடும்,
எதிரே வருவது
நீதான் என் தெரியும் வரை....
காதல் எப்போதும் சுகமானது
எட்டாக மடித்து
நீ தரும் கடித்தில்
என்னவென்று அறியும் வரை
இதயம் படபடக்குமே
காதல் எப்போதும் சுவையானது
எல்லோரும் உறங்கிய பின்னே
யாருக்கும் தெரியாமல்
நான் மட்டும்
கண்விழித்து அரைகுறை இருட்டில்
உன் இதயம்
கடிதனமாய் என்னுடன் பேச
காதல் எப்போதும் இதமானது
நீ உடுத்தி வரும்
உடை நிறத்தையே நானும் உடுத்திவர
சந்தோஷத்தால் புன்னகை பூத்து
செல்லமாக சிணுங்குவாயே
காதல் எப்போதும் இனிமையானது