Author Topic: ல‌ட்சு‌மி கடா‌ட்ச‌‌த்‌தி‌ன் பல‌ன் எ‌ன்ன?  (Read 5833 times)

Offline Global Angel


லட்சுமி கடாட்சம் உண்டு என்று சொல்கிறார்கள். அது என்ன பலனைக் கொடுக்கும்?

ஜோ‌திட ர‌த்னா க.ப‌.‌வி‌த்யாதர‌ன்: லட்சுமிக்குரிய கிரகம் சுக்கிரன். இந்த சுக்கிரன் தனஸ்தானம். 2ஆம் இடம் என்பது தனஸ்தானம். தனம், பணம் எல்லாவற்றையும் கொடுப்பது. இந்த தனம், பணம் ஸ்தானத்தில் வந்து சுக்கிரன் உட்கார்ந்திருந்தார் என்றால் அது மிகவும் விசேஷம்.

சந்திரனுக்கு 2ல் சுக்கிரன் இருந்தாலும், லக்னத்திற்கு 2ல் சுக்கிரன் இருந்தாலும் லட்சுமி கடாட்சம் உண்டு. அதேபோல, லக்னாதிபதி 2, 5, 9க்கு உரியவருடன் சேர்ந்திருந்தாலும் அவர்கள் லட்சுமி கடாட்சமாகவும் இருப்பார்கள், வீட்டிலும் லட்சுமி கடாட்சம் இருக்கும். ஒரு உயர்ந்த நிலையிலும் இருப்பார்கள்.