Author Topic: சோயா கோஃப்தா கறி  (Read 1139 times)

Offline kanmani

சோயா கோஃப்தா கறி
« on: July 05, 2012, 11:23:58 AM »
    கோஃப்தா செய்ய:
    வெள்ளை கொண்டக்கடலை - 2 கப்
    சோயா சன்க்ஸ் - 10
    கோதுமை மாவு - 2 மேசைக்கரண்டி
    வெங்காயம் - ஒன்று
    மல்லி இலை - சிறிதளவு
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    தனியா தூள் - 4 தேக்கரண்டி
    சீரக தூள் - ஒரு தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    தயிர் - ஒரு மேசைக்கரண்டி
    எண்ணெய் - பொரிப்பதற்கு
    கிரேவி செய்ய:
    வெங்காயம் - ஒன்று
    தக்காளி - 2
    இஞ்சி - சிறிதளவு
    பூண்டு - 5 பல்
    புதினா - சிறிதளவு
    மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
    தனியா தூள் - 2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    சீரக தூள் - அரை தேக்கரண்டி
    சோம்பு - ஒரு தேக்கரண்டி
    உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

முதல் நாள் இரவே கடலையை ஊற வைக்கவும். ஊற வைத்த கடலையை நன்கு சாஃப்டாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அதே போல் சோயாவை சுடு நீரில் போட்டு எடுத்து வைக்கவும். தண்ணீரை வடிக்கட்டி இரண்டையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

அதனுடன் கோஃப்தா செய்ய கொடுத்துள்ள மற்ற பொருட்களை சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும். தயிர் கெட்டியாக இருப்பது அவசியம்.

சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து வைக்கவும்.

வெங்காயம், இஞ்சி, பூண்டு, புதினா, சிறிதளவு சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

எண்ணெய் சூடானதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரையில் வதக்கவும்.

வாசம் அடங்கியதும் தக்காளியை அரைத்து சேர்க்கவும்.

நன்கு வதங்கியதும் எல்லா பொடி வகைகளையும் சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் பொழுது பொரித்து வைத்துள்ள கோஃப்தாவை சேர்க்கவும்.

எட்டு முதல் பத்து நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான சோயா கோஃப்தா கறி ரெடி. சப்பாத்தி, பூரிக்கு சரியான சைட் டிஷ்.

Note:

நான் இங்கே சேர்த்திருப்பது சோயா க்ரான்யுல்ஸ். சோயா இல்லையென்றால் ஒரு உருளையை வேக வைத்து சேர்த்துக் கொள்ளலாம். உருண்டையாக பிடித்து பொரிக்கும் போது மிதமான தீயில் பொரிக்கவும். அடிக்கடி கிளறாமல் இருந்தால் உடையாது. கோதுமை சேர்த்திருப்பதால் பொரிக்கும் போது உதிர்ந்து போகாமல் இருக்கும்.