Author Topic: புடலங்காய் சிப்ஸ்  (Read 969 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
புடலங்காய் சிப்ஸ்
« on: June 24, 2012, 08:04:20 PM »
தேவையானவை:

விதை, பஞ்சு நீக்கிய புடலங்காய் துண்டுகள் - ஒரு கப், கடலை மாவு - 4 டீஸ்பூன், சோள மாவு - ஒரு டீஸ்பூன், அரிசி மாவு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு - தேவையானஅளவு.

செய்முறை:

புடலங்காய் துண்டுகளை வேக வைத்து தண்ணீரை வடிகட்டவும். கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து, அதில் புடலங்காய் துண்டுகளைப் போட்டு கலந்து கொள்ளவும். எண்ணெயை சூடாக்கி புடலங்காய் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்