இல்லாத ஒன்றை
எப்பொழுதுமே
தேடிகொண்டிருக்கிறான்
மனிதன்
வாழ்வின் நியதிகளிங்கே
தடம்மாறிப்போயின
படைத்தவன் நாட்டங்கள்
வாழ்க்கையின் ஓட்டங்கள்
மறந்தே போய்விட்டது
வாழ்க்கையின் ஓட்டத்தில்
எதிர்பார்ப்புகளும்
ஏமாற்றங்களும்
கலந்ததுதான் வாழ்க்கை
இதுதான் மனிதன்
மறந்து விட்ட உண்மை
உணர்வுகளுக்கு முதலிடம்
உயர்வுகளில் பெருமிதம்
அந்தஸ்துக்காய் சண்டை
அதிகாரத்துக்காய் போட்டி
மனிதம் மட்டும்
இங்கே மரித்துப் போனது
மனிதத்தின் மகத்துவம்
பணங்காசுக்கு இருக்காது
மனிதர்களுக்கு அது
என்றைக்கும் புரியாது...
எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களானால்
விபரீதமாகும் மனிதவாழ்க்கை
வெற்றிகள் தொடர்கதையானால்
தடம்மாறும் அவர்தம் வாழ்க்கை
தோல்விகளை ஏற்றுக் கொள்ள
மனப்பக்குவம் மட்டுமில்லை
காலம் காலமாய்
அதில் மட்டும் இல்லை மாற்றம்
காலச்சுழல் மாறும்
நம் வாழ்க்கையும் ஒருநாள் மாறும்
வாழ்க்கைப் பயணம் ஒரு படகு
நம் லட்சியங்களே அதன் துடுப்பு
துடிப்பாய் நீயே இல்லாதபோது
துடுப்பை வலிக்கப்போவது யாரு?
களிமண்ணாயினும்,
கரும்பாறையாக இருந்தாலும்
முளைக்காமல் விடுவதில்லை
விளை நிலத்தில்
விழுகின்ற விதைகள்....
ஒளிமயமான கனவுகளும்
முயற்சியும் கொண்டால்
தோற்கப் போவதில்லை
நம் வாழ்க்கை