குழந்தையாய் நீ
தடுக்கி விழுந்த போதெல்லம்
நடக்க முயல்கிறாய் என
மகிழ்வுடன் உன்னை
தூக்கிப் பிடித்தேன்
சிறுவனாய் நீ
புள்ளிமானாய் துள்ளித்திரிந்த போது
தவறி விழுந்த போதெல்லாம்
தட்டிக் கொடுத்து தூக்கி விட்டேன்
வாலிபனாய் நீ
வளர்ந்து பருவ வேகத்தில்
பாய்ந்து சென்ற போதெல்லாம்
பாதை மாறிவிடக் கூடாதென
தடுத்துப் பிடித்தேன்
மனைவி வந்ததும் நீ
ஒதுங்கி வாழ்ந்த்ததை
உனக்கும் குடும்பம் என்றால் என்ன
என்று புரியட்டும் என
விட்டுப் பிடித்தேன்\
வருடம் ஒரு முறை ஊருக்கு
வந்து விட்டு
வேலைப்பளு என நீ சொன்ன
கூசாமல் பொய் சொன்னபோதும்
பாசக்காரன் என தட்டிக் கொடுத்தேன்
வயதான காலத்தில்
வாழ்க்கை சக்கரம் தேய்ந்து
வலுவிழந்து நான்
தடுக்கி விழுந்த போது
"கட்டிலோடு கிடந்தால் என்ன கேடு
இந்த கிழவனுக்கு" என
என் காதுபட உன் தாயிடம்
நீ கேட்டபின்தான்
தெரிந்த்தது மகனே
அன்று
உன் தாயுடன் நான்
கட்டிலில் கிடக்காமல் இருந்திருந்தால்
வந்திருக்காது இந்த வம்பு