Author Topic: சுரைக்காய் தயிர் கறி  (Read 1071 times)

Offline kanmani

சுரைக்காய் தயிர் கறி

    சுரைக்காய் - 1
    வர மிளகாய் - 2
    இலவங்கம் - 2
    சீரகம் - 1 tsp
    சுக்கு பொடி - 1/4 tsp
    சோம்பு பொடி - 1/2 tsp
    கரம் மசாலா பொடி - 1/2 tsp
    தயிர் - 1 கப்
    பெருங்காயம், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    முதில் சுரைக்காயை தொலை நீக்கி சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    நறுக்கியதை ஒரு துணியிலோ அல்லது பேப்பர் டவலில் சுற்றி ஈரத்தை ஒத்தி எடுக்கவும்.

    பிறகு எண்ணையில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    வேறு ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், இலவங்க, பெருங்காயம், சீரகம் சேர்த்து பொரிய விடவும்.

    பொரிந்ததும் பொரித்து வைத்துள்ள சுரைக்காயை சேர்க்கவும்.

    அதன் கூடவே சோம்பு பொடி, சுக்கு பொடி, வர மிளகாய், உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    தீயை கூடி வைக்கவும்.

    கொதி வந்ததும் தீயை குறைத்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் வேக விடவும்.
    தயிர் கடைந்து சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்.

    தீயை மேலும் குறைத்து ஐந்து நிமிடம் வைத்து விட்டு கடைசியாக கரம் மசாலா பொடியை தூவி இறக்கவும்.

    சுவையான சுரைக்காய் தயிர் கறி ரெடி.

    இது ப்ளெயின் ரைஸ், சப்பாத்தி, ரொட்டிக்கு நல்ல காம்பினேஷன்.