இன்ஸ்டன்ட் கோக்கனட் புட்டிங்
பால் பொடி - 1 கப்
தேங்காய் பால் பொடி - 1/2 கப்
தண்ணீர் - 2 கப்
கன்டென்ஸ்ட் மில்க் - 1/2 டின்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
ஜவ்வரிசி - 1/4 கப்
ஜெலாட்டின் - 3 டீஸ்பூன்
முதலில் ஜெலாட்டினில் 1/4 கப் சுடு நீர் ஊற்றி ஊறவிடவும்
மற்ற பொருட்களாகிய பால் பொடி,தேங்காய் பால் பொடி,கன்டென்ஸ்ட் மில்க் மற்றும் சர்க்கரை(சரிபார்த்தபின்)யை ப்லென்டரில் சேர்த்து சுடு நீர் 2 கப் சேர்த்து ஊறிய ஜெலாட்டினும் சேர்த்து அடித்து எடுக்கவும்..
ஜவ்வரிசியை ஊறவிட்டு சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்து கலந்து வைத்த பால் கலவையுடன் கலந்து சதுரமான ஒரு கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றி செட் செய்யவும்..
சூடு ஆறியதும் 2 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்தால் குளிர்ந்துவிடும்
சுவையான கோக்கனட் புட்டிங் ரெடி
Note:
இதன் சுவை அருமையாக இருக்கும் .குழந்தைகளுக்கு எப்போதுமே ரொம்பவும் பிடித்தமானதாக இருக்கும்.அவரவர் விருப்பம் போல் நட்ஸ் கொண்டு அலங்கரிக்கலாம்