ஆப்பிள் சாஸ் (Caramelized Apple)
1. ஆப்பிள் - 1
2. சர்க்கரை - 1 மேஜைக்கரண்டி
3. வெண்ணெய் - 1 தேக்கரண்டி
4. பட்டை தூள் - 1 சிட்டிகை
5. எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
ஆப்பிளை தோல் நீக்கி, விதை நீக்கி பொடியாக நறுக்கவும்.
இத்துடன் பட்டை பொடி, எலுமிச்சை சாறு கலந்து வைக்கவும்.
பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு மெல்ட் ஆனதும் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
சர்க்கரை நல்ல பிரவுன் கலராக மாறும்.
அப்போது ஆப்பிள் கலவை சேர்த்து கை விடாமல் கலந்து விடவும்.
ஆப்பிள் நன்றாக வெந்து சாஃப்டானதும் எடுக்கவும்.
சுவையான ஆப்பிள் சாஸ் தயார்.