click here enter chat Room www.friendstamilchat.net
இரவல் அறிவு.குருடன் ஒருவன் இருளிள் போவதை கண்டு ஒரு நல்லவன் உதவுவதற்காக விளக்கொன்றை கொடுத்தான். "எனக்கு எப்போதுமே இருள்தானே..! எதற்காக விளக்கு..?" என்றான் குருடன். "உனக்காக அல்ல.. எதிரே வருபவர்கள் உன்னை விலத்தி போவதற்காகவே..!" என்றான் அவன். குருடனும் சம்மதித்து அந்த விளக்கை வாங்கி கொண்டு போனான்., சிறிது தூரம் சென்றதும் எதிரே ஒருவன் வந்து வேகமாக மடேலென்று மோதிக்கொண்டான். மோதியவனை குருடன் கேட்டான். "விளக்கின் வெளிச்சம் இருந்தும் உனக்கு நான் வந்தது தெரியவில்லையா..?" என்று. அதற்கு அவன்.., "நீ விளக்கை ஏந்தி இருப்பது உண்மைதான்.. ஆனால் உன் விளக்கு எப்பவோ அனைந்து விட்டது..!" என்றான் சிரித்தபடி. குருடன் மனத்திகைப்பு நீங்கியவனாக தவறு என்னுடையதுதான். அவரவரும் தன்சுய அறிவைத்தான் பயன் படுத்த வேண்டும். இரவல் ஞானத்தால் எந்த பயனும் இல்லை என்பதை புரிந்து.., விளக்கை வீசிவிட்டு.., குச்சியை எடுத்து கொண்டு பாடிக்கொண்டே நடந்தான் குருடன்..! இப்போது அவனால் சிரமமின்றி நடக்க முடிந்தது.(கட்டி கொடுத்த உணவும்.., சொல்லிக் கொடுத்த சொல்லும் நெடுந்தொலைவு வராது..!என்பது போல் இரவல் அறிவும் நெடுந்தொலைவு வராது.