கோடைக்கு இளநீர் மிகவும் நல்லது. உடலை குளிர்ச்சி செய்யக் கூடியது. இதிலுள்ள தாது உப்புகள், வியர்வையால் நாம் இழக்கும் சக்தியை திரும்பத் தரக் கூடியது. அந்த இளநீரை பயன்படுத்தி ஒரு அருமையான ஜூஸ் செய்து குடிப்போமா!
தேவையான பொருட்கள் :
இளநீர் - 1 டம்ளர்
இளநீர் வழுக்கை - 1 கப்
சர்க்கரை - 2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு- 1 தேக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை
ஐஸ் துண்டு - சிறிது
செய்முறை :
முதலில் இளநீர், இளநீர் வழுக்கை, சர்க்கரை ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
பின் அதை ஒரு டம்ளரில் ஊற்றி, அதில் எலுமிச்சை சாறு, உப்பு கலந்து, சிறிது ஐஸ் துண்டுகள் போடவும்.
இப்போது சுவையான இளநீர் ஜூஸ் ரெடி!!!
ஆனால், அளவுக்கு அதிகமாக கால்சியம் சத்து உள்ளதால் இதை தினமும் அருந்தக் கூடாது.