தமிழ் மொழி மாற்ற பெட்டி https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
படித்ததில் பிடித்தது!ஊடகங்களால்உருவாக்கப்பட்ட உயரம்உன்னுடையது இல்லை..! எவன் மூளையிலோஉதித்த கருத்துக்களைஉன்னுடையது போலவேஒலிபரப்புகிறாய்..! இரவல் குரலில் பாடும்போதேஅது உன் பாடலாகிறது..! சுயமாய் எதுவுமற்ற நீபுணர்வதற்கும் சேர்த்தேகூலி வாங்குகிறாய்..! அத்தனை பேரின்உழைப்புக்கும் சேர்த்துநீ ஒருவனேஊதியம் பெறுகிறாய்..! உன் மின்னும் மேனிதொங்கு சதையாகிதளரும்போதுமுதல்வர் கனவுமுளைத்து விடுகிறது..! கறுப்புப் பணத்தைகணக்கு காட்டாமல்..ஒளித்து வைத்த நீஊழலை ஒழிக்கபுறப்பட்டு விடுகிறாய் காமத்துப் பாலில்திளைக்கும் உனக்கு”கட்-அவுட்” டில் பாலூற்றும்இரசிகர்கள்..!அவர்களுக்கு நீயேகடைசிப் பாலூற்றுகிறாய்..! நீ விரித்த..மாய வலைக்குள்வீழ்ந்தவர்கள்வாழ்விழந்தனர்..! நம்பிய பெண்கள்கற்பை இழந்தனர்..! நாங்கள்-நாட்டை இழந்துநம்பிக்கை தொலைத்துநிற்கிறோம்..!-அமீர் அப்பாஸ்