ஒருங்குறித் தமிழில் (unicode tamil) எழுதுவதற்குப் பல மென்பொருட்கள் உள்ளன. அவற்றில் ஒன்று NHM எழுதி.
http://software.nhm.in/products/writer இந்த இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். ( இந்த மென்பொருள் விண்டோஸ் அடிப்படையிலான இயங்குதளத்திற்கு மாத்திரம் XP, Vista, Windows 7..)
படம் 1

பின்னர் நிறுவப்படவேண்டிய NHMWriterSetup1511.exe இல் சொடுக்கி நிறுவத்தொடங்குங்கள். மேலதிக விளக்கத்திற்காக கீழுள்ள படங்களைப் பார்க்கவும்.
NHM writer user manual









நிறுவல் பூர்த்திசெய்யப்பட்டதும் Task bar ல்( மணி போன்ற சிறிய படம்), Desktopல் NHM Writter ற்கான ஐகனை காண்பீர்கள்

பின்னர் உங்களுக்கு பிடித்த/ பழக்கமான தமிழ் தட்டச்சு செய்யும் வசதியை

Alt+0 அல்லது Alt+1 அல்லது Alt+2 அல்லது Alt+3 அல்லது Alt+4 அல்லது Alt+5 ஐ அழுத்தி தெரிவு செய்தபின் எந்த ஒரு இடத்திலும் தமிழில் நேரடியாக தட்டச்சு செய்யலாம். ந்கல் செய்து ஒட்ட வேண்டிய அவசியம் இல்லை.
நிறுவிய பின்ன ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறித் தட்டச்சு செய்யலாம். நகலெடுத்தல் , ஒட்டுதல் (copy , paste ) செய்ய வேண்டிய அவசியமில்லை. இணைய அரட்டை செய்யும் போது தமிழ், ஆங்கிலத்தில் மாறி மாறி விரைவாக தட்டச்சு செய்ய முடியும். அத்துடன் இது பல ( applications : eg : MS office, notepad, IE explorers and so on) பிரயோகங்களுடன் ஒத்திசைந்து தமிழில் தட்டச்சு செய்ய உதவுகிறது.
மேலதிக உதவிகள்
) ஒலிப்பு முறையை பயன்படுத்துவதாயின் பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தவும்

உயிரெழுத்துக்கள்
அ = a, ஆ = aa அல்லது A, இ = i , ஈ = ii அல்லது I உ = u , ஊ = uu அல்லது U
எ = e , ஏ = ee அல்லது E , ஐ = ai, ஒ = o , ஓ = oo அல்லது O , ஔ = au
ஆய்த எழுத்து
ஃ = q
மெய் எழுத்துக்கள்
க் = k அல்லது g, ங் = ng, ச் = s அல்லது c , ஞ் = nj அல்லது X , ட் = d அல்லது t , ண் = N,
த் = th, ந் = w , ப் = p அல்லது b, ம் = m , ய் = y , ர் = r ,
ல் = l , வ் = v, ழ் = z , ள் = L , ற் = R, ன் = n
விசேட எழுத்துக்கள் ( வட மொழி எழுத்துக்கள் -மெய்)
ஜ் = j, ஷ் = Z அல்லது sh, ஸ் = S, ஹ் = ன் , க்ஷ் = ksh
விசேட எழுத்துக்கள்
க்ஷ் = ksh
ஸ்ரீ = sr
ந்த் = nth உயிர்மெய் எழுத்துக்கள்
க = க்+அ = ka , கா = (க்+ஆ) =kA அல்லது kaa , கி = (க்+இ) = ki , கீ = (க்+ஈ) = kii அல்லது kI , கு = (க்+உ) = ku கூ =
(க்+ஊ) = kU அல்லது kuu,
கெ = க்+எ = ke , கே = (க்+ஏ) = kE அல்லது kee, கை = க்+ ஐ = kai, கொ = (க்+ஒ) = ko, கோ = க்+ஓ = koo அல்லது kO,
கௌ = (க்+ஔ) = kau
உதாரணங்கள் சில..
அம்மா - ammaa அல்லது ammA
வணக்கம் - vaNakkam
நன்றி - wanRi
2) பாமினி விசைப்பலகை அமைப்பை பயன்படுத்துவதாயின்

3) தமிழ் 99 விசைப்பலகை அமைப்பை பயன்படுத்துவதாயின்

(E-கலப்பையை பயன்படுத்துவதற்கான வழிமுறையை தெரிந்து கொள்ள இங்கே அழுத்துங்கள்
https://www.facebook.com/note.php?note_id=127514014709 . அல்லது https://www.facebook.com/media/set/?set=a.10150173484532473.293547.141482842472&type=1 )