Author Topic: சிஸ்டத்திற்குள் சிஸ்டம்!  (Read 4855 times)

Offline Yousuf

ஒரே கம்ப்யூட்டரில் இரண்டு சிஸ்டங்கள் இருந்தால், பூட் செய்கையில் எந்த சிஸ்டத்தில் நுழைய என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டு, நம் ஆப்ஷனைக் கேட்கும் ஒரு விண்டோ தரப்படும். ஐ ரிபூட் (iReboot) என்ற புரோகிராம் விண்டோஸ் தொடங்கிய பின்னரும் அதனுள்ளாக இன்னொரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவதற்கான ஆப்ஷனைத் தருகிறது. அப்படி ஆப்ஷன் தரும் சிஸ்டம் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையிலும் உள்ளது. விண்டோஸ் இயங்கிய பின் இது சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொள்கிறது. அதனைக் கிளிக் செய்தால் நமக்கு ஆப்பரேட்டிங் சிஸ்டம் தேர்வு செய்திட ஆப்ஷன்ஸ் தருகிறது. இதிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தால், தேர்ந் தெடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் கம்ப்யூட்டர் நுழைந்து கொள்கிறது. இதைப் போன்ற ஒரு வசதி, விண்டோஸ் 7 உட்பட, எந்த விண்டோஸ் சிஸ்டத்திலும் தரப்படவில்லை. இதனைப் பெற http://neosmart.net/dl.php?id=11 என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.