Author Topic: கலாச்சாரப் பிணங்கள்!!!  (Read 2266 times)

Offline Yousuf

கலாச்சாரப் பிணங்கள்!!!
« on: July 30, 2011, 01:44:06 PM »
ஆழிஅலை விழுங்கிய
தமிழ் மண்ணின் மீதி
தெறித்து ஒதுங்கிய
சிறு எச்சில் நாகரீகத் துளிகளையும்
அடையாளம் இல்லாமல்
நக்கி துடைக்கிறது
மேற்கின் நீண்ட நாக்கு!

அய்யனின் வாரிசுகளின்
தலைக்குள் பெருக்கெடுத்த
பித்தம் கிழித்துக் கொண்டு
சுற்றுகிறது நியுயார்க் நகரவீதிகளில்!

சென்னை மாநகர
சாலையோர சுவர்களில் எல்லாம்
முன்னோர்களின் பிணங்கள்
வண்ணப் பதிவுகளாக சிரிக்கின்றது!.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: கலாச்சாரப் பிணங்கள்!!!
« Reply #1 on: July 30, 2011, 11:10:23 PM »
nalla kavithai.... nammalungalukku seekram marakura buththi erukku athuthan verum padangala maati vitutu avanga avanga thanga worka paarkapoidurangal.. ;) ;) ;)

yow poster oturavanuku  polappu venamaa >:( >:( >:(