Author Topic: காத்திருக்கின்றேன் ஆவலுடன் !  (Read 636 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

கண்ணால்  காண்பதும்  பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய் எனும் மெய்யான
சாரம் அதை அறியாமல் இருக்க வாய்ப்பில்லை
இருந்தும், அறியாமல், அணுவும் புரியாமல்
கோழி கூவ பொழுது புலர்ந்ததாய் எண்ணி
தூக்கத்தை தொலைத்திருக்கும் தூயவளே !
உண்மை என்ன என உணர்ந்து ,உண்மையை
உண்மையாய் உணர்வாய் என நம்பிக்கையாய்
காத்திருக்கின்றேன் ஆவலுடன் !

அரைமதியாய் ,குறைமதியாய்
இருந்து வந்த பிறைமதியே !
திருமதியாய் ஆகபோவதாய்
கேள்விபட்டேன் ,
திருமதியாய், முழுமதியாய்
நண்மதிப்போடு நிலைத்திருக்க
மனம் நிறைந்த , வாழ்த்துக்கள் !