Author Topic: உழைப்பாளி  (Read 651 times)

Offline Jawa

உழைப்பாளி
« on: May 05, 2012, 06:26:33 PM »
பயிற்சி கூடம் சென்று நீ
பக்குவமாய் ஏற்றிவைத்த
வயிற்று தசைநார்கள் - அங்கு
பத்துநாள் செல்லாவிடில்
பயனற்று போகுமடா !

படுக்கையில் கிடந்தாலும்
பலமாதம் கடந்தாலும் - எம்
உழைப்பாளர் உடல்நார்கள்
உழைத்து உழைத்தே நிதம்
உரமேறி நிற்குமடா !

வீரனுக்கு அது விளையாட்டு
இளைங்கனுக்கு அது இறுமாப்பு
நடிகனுக்கு அது ரசிகை கூடம்
உழைக்கும் எங்கள் உழைப்பாளிக்கு
உன்னதமான உழைப்பின் சுவடு !

சுமைதூக்கும் தொழிலாளி ,
ஏர்பூட்டும் விவசாயி ,
மரம் ஏறி பிழைத்தாலும் - நெஞ்சில்
உரம் ஏறி வாழும் மக்கள்
உலடலன்றி உள்ளமும் வலிமையே !

மண்ணை மாளிகையாக்கி
பொன்னை பொருளாக்கி
துரும்பை தூணாக்கி
கரும்பாய் உடலுழைப்பை பிழிந்த
வேர்வையே அவர் வெற்றி பரிசு !

அழுக்கு துணி துவைத்தே வாழ்ந்தாலும்
அவர்வாழ்வில் வெண்மை இல்லை ,
உண்ணும் ஒருவேளை உணவும்
உழைப்பால் கிடைத்தால் அமிர்தமே
என்றெண்ணி வாழும் தொழிலாள வர்க்கமே !
பயிற்சி கூடம் சென்று நீ
பக்குவமாய் ஏற்றிவைத்த
வயிற்று தசைநார்கள் - அங்கு
பத்துநாள் செல்லாவிடில்
பயனற்று போகுமடா !

படுக்கையில் கிடந்தாலும்
பலமாதம் கடந்தாலும் - எம்
உழைப்பாளர் உடல்நார்கள்
உழைத்து உழைத்தே நிதம்
உரமேறி நிற்குமடா !

வீரனுக்கு அது விளையாட்டு
இளைங்கனுக்கு அது இறுமாப்பு
நடிகனுக்கு அது ரசிகை கூடம்
உழைக்கும் எங்கள் உழைப்பாளிக்கு
உன்னதமான உழைப்பின் சுவடு !

சுமைதூக்கும் தொழிலாளி ,
ஏர்பூட்டும் விவசாயி ,
மரம் ஏறி பிழைத்தாலும் - நெஞ்சில்
உரம் ஏறி வாழும் மக்கள்
உலடலன்றி உள்ளமும் வலிமையே !

மண்ணை மாளிகையாக்கி
பொன்னை பொருளாக்கி
துரும்பை தூணாக்கி
கரும்பாய் உடலுழைப்பை பிழிந்த
வேர்வையே அவர் வெற்றி பரிசு !

அழுக்கு துணி துவைத்தே வாழ்ந்தாலும்
அவர்வாழ்வில் வெண்மை இல்லை ,
உண்ணும் ஒருவேளை உணவும்
உழைப்பால் கிடைத்தால் அமிர்தமே
என்றெண்ணி வாழும் தொழிலாள வர்க்கமே !