உருளை - 2
வெங்காயம் - பாதி
பச்சைமிளகாய் - பாதி
மஞ்சள் தூள் - சிறிது
மிளகு தூள் - சிறிது
மிளகாய் தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
முட்டை - ஒன்று
ப்ரெட் க்ரம்ப்ஸ் - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
டூனா டின் - சிறிது
உருளையை வேக வைத்து மசித்து அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் தூள் வகை எல்லாம் சேர்த்து பிசையவும். பிசைந்த உருளை கலவையை உருண்டைகளாக பிடிக்கவும்.
இது தான் இந்த ஊர் மிளகாய் (Githeyo Mirus). பார்க்க சின்னதா இருந்தாலும் காரம் ஏகம். இதில் அரை மிளகாய் தான் சித்ராம்மா செய்த 4 வகைக்கும் சேர்த்தே ஆச்சு.
முட்டையை கப்பில் ஊற்றி அடிக்கவும். அடித்த முட்டையில் உருளை உருண்டையை முக்கி எடுக்கவும்.
இதை ப்ரெட் க்ரம்ப்ஸில் போட்டு பிரட்டி எடுக்கவும்.
நன்றாக அழுத்தி பிடிக்கவும். அப்போது தான் தூள்கள் எண்ணெயில் போகாது. இதே போல் எல்லாம் உருண்டையையும் தயார் செய்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான கட்லட் தயார். இதிலும் டூனா மீன் துண்டுகளை சேர்த்தே செய்வார்கள். விரும்பினால் சேர்த்து கொள்ளவும்.
மாலத்தீவு சமையலில் பல வருட அனுபவம் உள்ள திருமதி. சித்ரா அவர்கள் செய்துகாட்டியது.