Author Topic: பீட்ரூட் கட்லெட்  (Read 969 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
பீட்ரூட் கட்லெட்
« on: April 30, 2012, 05:47:06 PM »
பீட்ரூட் - 2
வாழைக்காய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
ப்ரெட் க்ரம்ப்ஸ் - அரை கப்
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/8 தேக்கரண்டி
ஆம்சூர் பொடி - கால் தேக்கரண்டி
சீரக தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு



வாழைக்காயை தோலுடன் வேக வைத்து எடுக்கவும். முக்கால் வேக்காடாக இருந்தால் போதுமானது. ரொம்பவும் குழைவாக வேக வைக்க வேண்டாம். ஆறியபின் தோலுரித்து உதிர்த்து வைக்கவும்.

பீட்ரூட்டை துருவி வைக்கவும். இஞ்சி பூண்டை நசுக்கி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி பூண்டு சேர்த்து சிவக்க வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

இப்பொழுது துருவி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

இரண்டு நிமிடம் வதக்கிய பின்னர் எல்லா தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

ஐந்து நிமிடம் வதக்கி, வேக வைத்து உதிர்த்த காயை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

ஆறியபின் அதனுடன் ப்ரெட் க்ரம்ப்ஸ், கொத்தமல்லி சேர்த்து நன்றாக பிசைந்து தேவையான வடிவத்தில் தட்டி வைக்கவும்.

ஒரு பேனில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கட்லெட்டை வைத்து மூன்று நிமிடம் ஒவ்வொரு பக்கமும் மிதமான தீயில் வேக விடவும். திருப்பி போடும் போது ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். எண்ணெயை பரவலாக அதன் மேல் ஊற்றவும்.

சுவையான மாலை நேர ஸ்நாக் ரெடி. சூப் அல்லது ஹாட் அண்ட் சோர் சாஸுடன் பரிமாறவும். சற்று இனிப்பாகவே இருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
 
பீட்ரூட் இனிப்பு தன்மை உடையதால் இந்த கட்லெட் கொஞ்சம் இனிக்கும். அதனால் தான் உபயோகிக்கும் வாழைக்காய் நன்கு காயாக இருப்பது அவசியம். இனிப்பு பிடிக்காதவர் மிளகாய் தூளை கூட்டி கொள்ளலாம். அல்லது பச்சை மிளகாயும் சேர்த்துக் கொள்ளலாம். வாழைக்காய்க்கு பதிலாக உருளை சேர்த்தும் செய்யலாம். ரெடிமேட் ப்ரெட் க்ரம்ப்ஸ் இல்லையென்றால் பிரெட்டை பொடித்து ஒரு வாணலியில் சிவக்க வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்