தலைக்கு ஹென்னா
நெல்லிக்காய் பொடி, மருதாணி, டீ டிக்காஷன் அனைத்தையும் தண்ணீர் சேர்த்து கலந்து இரும்பு கடாயில் முதல் நாள் இரவே ஊற வைக்க வேண்டும். மறுநாள் இந்த கலவையோடு முட்டையின் வெள்ளைக்கரு, தயிர் சேர்த்து கலந்து தலையில் தேய்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க வேண்டும். தயிர் கலப்பதினால் பொடுகு தொல்லை இல்லாமல் இருக்கும். ஹென்னா போடும் நாள் மட்டும் முடிக்கு ஷாம்பு போடாமல் வெறும் தண்ணீரில் அலசினால் தான் அதன் சாரம் தலையில் தங்கும்.