Author Topic: ~ குளிர வைக்கும் அத்திக்காய்! ~  (Read 977 times)

Offline MysteRy

குளிர வைக்கும் அத்திக்காய்!




அத்திக்காய் உடம்பு சூட்டுக்கு மிகவும் நல்லது. இதனையும், பருப்பையும் சேர்த்து சமைத்து சாப்பிடுவது நலம். முற்றின காயாக இருந்தால் மலத்தைப் போக்கும். ஆனால் பிஞ்சுக் காயாக இருந்தால் மலத்தை கட்டி விடும்.

இதனால் மேகம், வாதம், உடல் வெப்பம், புண் ஆகியவை போகும். இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. சில நேரங்களில் புதினாக் கீரையை இதனுடன் சேர்த்து சமைக்கும் வழக்கமும் இருக்கிறது.

இந்தக் காயின் சுபாவம் குளிர்ச்சி. அத்திப் பிஞ்சினால் மூல வாயு, மூலக் கிராணி, ரத்தமூலம், வயிற்றுக் கடுப்பு, ஆகிய அனைத்து விதமான பிரச்சினைகளும் குணமாகும். மேலும் இது பத்தியத்திற்கு ஏற்றது ஆகும்.