இசை அரசியே...
உன் பாடல்களைப் பாடியே
எண்ணற்ற மேடைகளில் நின்றேன்...
உன் குரலின் நிழலைத் தொடர்ந்து
பல போட்டிகளில் வெற்றி கண்டேன்...
என் கைகளில் ஏறிய
ஒவ்வொரு பரிசுக்கும் பின்னால்,
உன் பாடலின் ஆசீர்வாதம் இருந்தது...
நான் பெற்ற கைதட்டல்கள்
எனக்கானவை அல்ல...
உன் பாடல்களுக்கு
மக்கள் தந்த மரியாதை
இன்று நீ இல்லை என்ற செய்தி
என் இதயத்தை கனக்கச் செய்தாலும்...
நீ கற்றுக் கொடுத்த இசையும்,
நீ விட்டுச் சென்ற பாடல்களும்,
என் வாழ்நாள் முழுவதும்
என் குரலிலும்...
என் நினைவுகளிலும்...
என்றென்றும் வாழும்
இசை அரசியே...
நீ பாடிய பாடல்களே
என்னை மேடைகளில் உயர்த்தின...
இன்று அந்த மேடைகளே
உனக்காக அமைதியாகத் தலை
குனிகின்றன
கண்ணீருடன்...
என் இசைக் காதலுக்கு
ஆழ்ந்த அஞ்சலி
அன்புடன்,
Natpudan JSB