Author Topic: நெற்றியில் திலகமிடுவது எதற்காக தெரியுமா?  (Read 23 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226843
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


பெண்கள் என்றால் நெற்றியில் திலகமிட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். திருமணம் ஆகாத பெண்கள் நெற்றியிலும், திருமணம் ஆன பெண்கள் நெற்றி மற்றும் நெற்றியின் வகிடிலும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூற கேட்டிருப்போம். ஏன் அவ்வாறு திலகமிடுவது அவசியம் என்று கூறுகிறார்கள் தெரியுமா?

இந்து மத ஆசாரப்படி ஒரு பெண் இரண்டு புருவத்திற்கும் மத்தியில் குங்குமத்தை வட்டமாக வைத்து கொள்ள வேண்டும்.
முந்தைய காலத்தில் பெண்களைச் சிலர் தன் வசியப்படுத்தி அழைத்துச் சென்றுவிடுவதாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், நெற்றியின் மத்தியில் குங்குமம் வைத்தால் அந்த பெண்ணை யாராலும் தன் வசப்படுத்த முடியாது. அந்த அளவிற்கு சக்தி மஞ்சள், குங்குமம் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது அறிவியல் ரீதியாக நம்பப்படுகிறது.
நெற்றியின் மையத்தில் குங்குமம் வைப்பதனால் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களில் அடங்கி உள்ள மருத்துவ சக்திகளை எடுத்து நம் மூளைக்குள் செலுத்திவிடுகிறது. இதனால் நம் உடலில் உள்ள நரம்பு மண்டலத்தைச் சீராக இயக்கி, உடல் உபாதைகளிலிருந்து காக்கிறது. முக்கியமாக கண்களை பாதுகாக்கிறது.

நாம் சந்தனத்தை பிரம்ம முகூர்த்தத்திலும், சூரியன் உதித்த பிறகு குங்குமத்தையும், மாலைப் பொழுதினில் திருநீரையும் அணிந்து வந்தால் நரம்பு மண்டலம் உறுதிப்பட்டு நோய் வராமல் தடுக்கப்படும்.