Author Topic: காகிதம் நான் !  (Read 45 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1196
  • Total likes: 4014
  • Total likes: 4014
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
காகிதம் நான் !
« on: November 17, 2025, 12:14:49 PM »
காற்றில்
அசைந்தாடும்
காகிதம் நான்

காற்றில் அசைந்து
சில நேரம் உங்கள் அருகில்
வரக்கூடும்  நான்

சில நேரம்
அழகான கவிதை தாங்கி
உங்களை மகிழ்விக்க கூடும்

சில நேரம்
அழகான கதையின்
ஒரு பகுதியாய் நான்

சில நேரம்
நகைச்சுவையாய்
உங்கள் உதடுகளில்
புன்சிரிப்பை கடத்துபவனாய் 
நான்

சில நேரம்
புரியாத மொழி தாங்கி
உங்களை குழப்பக்கூடும்
நான்

சில நேரம்
வெற்றுக்காகிதமாய்
நான்

யாரோ ஒருவருக்கு
ஏதோ ஒரு கணம்
வேண்டாதவனாய் மாறியதால்
காற்றில் அலைக்கழிந்து கொண்டிருக்கிறேன்

காற்று வீசும் வரை
நான் நகர்வேன்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Yazhini

Re: காகிதம் நான் !
« Reply #1 on: November 18, 2025, 05:20:14 AM »
மிக அருமை சகோ...
ஏதோ சில பக்கங்களை மீண்டும் புரட்டி பார்த்த உணர்வு 🔥