அவள்

அவள்
அவளாகவே இருக்கிறாள்
என் அருகில் இருக்கையில்
கோபம் வருகிறது என்றால்
அடுத்த நொடி முகம் சுளிப்பாள்
உண்மையில் அவள் இப்படி
முகம் சுளிப்பாள் என்றால் யாருமே நம்பமாட்டார்கள்
நான் அப்படியொரு பாக்கியசாலி
கடுப்பாகிவிட்டாள் என்றாள்
இடம் பொருள் பாராமல்
திட்டி தீர்த்துவிடுவாள்
அந்த உரிமை அவளுக்கு
இருக்கிறது என்று
எப்படி தெரிந்ததோ தெரியாது
அவள் மற்றவர்களுடன் இருக்கையில்
பேசி சிரிப்பதைப்போன்றெல்லாம்
ஒருபோதும் என்னுடன் இருந்ததில்லை
முன்பு அதில் எனக்கு
வருத்தம் இருந்தது
ஆனால் இப்போதுதான் புரிந்தது
உண்மையில் என் அருகில் இருக்கையில்
அவள் அவளாகவே இருக்கிறாள் என்று
உண்மையான அன்புக்கு
நடிக்க தெரியாது
அவள் என்னிடம் நடித்ததில்லை
உண்மையான அன்புக்கு பேசவேண்டுமே
என பேசத் தெரியாது
அவள் என்னிடம் அப்படி பேசியதில்லை
அவளுடன் எத்தனை சண்டைகள்
எத்தனை மௌனங்கள்
எத்தனை கண்ணீர்த்துளிகள்
அதற்கு எல்லாம் காரணம்
அவள் போலியாக இல்லாமல்
என்னிடம் அவள் அவளாகவே இருக்கிறாள்
அவள் என்னருகில் இருக்கையில்
அவள் அவளாகவே இருக்கிறாள்
என்பதைவிட வேறு எந்த விதத்தில்
நான் அதிஷ்டசாலியாகிவிட போகிறேன்
என் அவள்…..