Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
ஆன்மீகம் - Spiritual
»
ஆஞ்சநேயரின் சிறப்புக்கள்..
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ஆஞ்சநேயரின் சிறப்புக்கள்.. (Read 112 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226126
Total likes: 28541
Total likes: 28541
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
ஆஞ்சநேயரின் சிறப்புக்கள்..
«
on:
October 29, 2025, 08:49:28 AM »
ஆஞ்சநேயர் எட்டு விதமான சிறப்புகளை கொண்டவர் என்பதால் அஷ்டாம்ச ஆஞ்சநேயர் எனப்படுகிறார்.
1. அனுமனது வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி "அஞ்சேல்' என்று அபயஹஸ்தத்துடன் வரங்களை வாரிக் கொடுப்பது முத்திரை பதிக்கும் முதல் சிறப்பு.
2. மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவைகளையும், வெளி எதிரிகளையும் அழிக்கக் கூடியது. இந்த ஐந்து வகை ஆயுதங்களில் கதாயுதம் மிகவும் சிறந்தது. வெற்றியை மட்டுமே தரக்கூடிய இடது கையில் அனுமன் தாங்கும் கதாயுதம் இரண்டாவது சிறப்பு.
3. மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வது தான் வாழ்க்கை. ராமாயணத்தில் லட்சுமணன் மயங்கிக் கிடந்த நிலையில் அவரைக் காக்க ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வந்தததில் ஒரு பகுதி தான் மேற்கு தொடர்ச்சி மலையில் சகல வியாதிகளையும் தீர்க்கக் கூடிய மூலிகைச் செடிகள் உள்ளன.
ஆஞ்சநேயர் இந்த மலையை பார்த்தபடி அருள்பாலிக்கிறார். இவரை தரிசிப்பதன் மூலம் நோய் நொடியற்ற வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கை. - மேற்கு நோக்கிய முகம் மூன்றாவது சிறப்பு.
4. எமதர்மராஜனின் திசை தெற்கு. ஆஞ்சநேயரின் தெற்கு நோக்கிய கால்களை வணங்குவதால் மரணபயம் நீங்கி ஆயுள் பெருகுகிறது. நல்வாழ்வு தரும் நான்காவது சிறப்பு.
5. ஆஞ்சநேயரது மிகவும் சிறப்பு பெற்ற வாலில் நவக்கிரகங்களும் அடங்கியுள்ளன. அதிலும் குபேர திசையான வடக்கு நோக்கி வால் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு. இதனால் குபேரனின் அருள் முழுமையாக கிடைக்கும். இங்கு வடக்கு நோக்கிய வாலை முழுமையாக தரிசிக்கலாம்.
ஆஞ்சநேயரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் பிடிக்கும் என்ற பயமே தேவையில்லை. "ஓ ராமா! உனது நாமாவையோ, இந்த அனுமனின் நாமாவையோ யார் கூறினாலும், அவர்களிடம் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன், '' என்று ராமரிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவார்கள். ஐயம் போக்கும் ஐந்தாவது சிறப்பு.
6. ஆலவாயன் சிவனின் அம்சம் ஆறாவது சிறப்பு. ராமாயணத்தில் கடவுளர்கள், தேவர்கள் என ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம் ஏற்றார்கள். அதன்படி ஆலவாயனான சிவன் ராமாயணத்தில் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஆஞ்சநேயர். எனவே தான் அனுமரை வணங்க சைவ, வைணவ பேதமெல்லாம் கிடையாது. ஆஞ்சநேயரின் தரிசனம் சிவ தரிசனத்திற்கு ஒப்பானது. ஆஞ்சநேயரும், சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.
7. ஏழுமலையானின் அனுக்கிரகம் ஏழாவது சிறப்பு. ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி இருந்து அருள் பாலிப்பது போல, இங்கு ஆஞ்சநேயரின் வலது உள்ளங்கை மத்தியில் மகாலட்சுமி அமர்ந்திருக்கிறாள். இதனால் அஷ்டலட்சுமிகளின் அனுக்கிரகம் கிடைக்கிறது.
8. எரிகின்ற சூரியன் எட்டாவது சிறப்பு. ஆஞ்சநேயரின் கண்கள் காலை நேரத்தில் எரிகின்ற சூரியனாகவும், மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும் காட்சி தருகிறது. ஜீவநேத்திரம் மிகவும் சிறப்பு பெற்றது. அனுமனின் பார்வையே தரிசிப்பவர்களைன் அனைத்து தோஷங்களையும் நீக்கி அருள் மழை பொழியவைக்கிறது என்பதை உணரலாம்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
ஆன்மீகம் - Spiritual
»
ஆஞ்சநேயரின் சிறப்புக்கள்..