Author Topic: தொண்டையில் புண் ஏன் ஏற்படுகின்றது?  (Read 304 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/

பொதுவாக காலநிலை மாற்றத்தினால், இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படக்கூடும். அதுமட்டுமின்றி இவைகள் அளவுக்கு அதிகமாகும் போது, காய்ச்சல் வர ஆரம்பிக்கும். ஆகவே அப்படி அவஸ்தைப்படும் போது, ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்வதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

அந்தவகையில் தொண்டைப்புண் ஏன் ஏற்படுகின்றது? அதனை போக்குவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
....

தொண்டை புண் ஏன் ஏற்படுகின்றது?

பெரும்பாலும் தொண்டைப் புண் வைரஸ் கிருமிகளால் உண்டாகிறது. இது சளிக் காய்ச்சல் ஏற்படும்போது காணப்படும். ஆனால் சில வேளைகளில் அது பேக்டீரியா கிருமிகளாலும் உண்டாகும். அவை ஸ்ட்ரெப்ட்டோகாக்கஸ் பேக்டீரியா கிருமிகளால் உண்டாகிறது.
....

அறிகுறிகள் என்ன ?

வலி அல்லது அரிப்பு போன்ற உணர்வு, உணவு விழுங்கும்போதும் பேசும்போதும் வலி, உலர்ந்த தொண்டை, கழுத்துப் பகுதியில் கரலை உருண்டைகள், தொண்டைச் சதை வீக்கம், தொண்டைச் சதையில் சீழ் அல்லது வெள்ளைப் புள்ளிகள்.. குரல் கம்மிப்போதல்...
...

#தீர்வு:

தொண்டை கட்டிக் கொண்டு பேச முடியாமல் இருந்தால், தேனும், சிறிது சுண்ணாம்பும் கலந்து கழுத்தில் தடவ குறையும். பாதாம் பருப்பை அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை எரிச்சல் குறையும். தொண்டை வலி ஏற்படும்போது மா இலைகளை தணலில் இட்டு வெளிவரும் புகையை சுவாசித்து வந்தால் தொண்டை வலி குறையும்.
வேப்பம் பூவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்து வந்தால் தொண்டையில் ஏற்படும் புண் குறையும்.

4 பூண்டு பல் இடித்து கூழாக்கி 1 தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.
இஞ்சியை தோல் நீக்கி கழுவி சிறிதளவு எடுத்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.
சித்தரத்தையை எடுத்து இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். இந்த பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.

1 தேக்கரண்டி மிளகுத்தூள் மற்றும் கிராம்புத்தூள் எடுத்து 1 டம்ளர் நீர் விட்டு சிறிது சூடேற்றி எடுத்து அதில் சிறிது தேன் கலந்து வெதுவெதுப்பான சூட்டில் குடித்து வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குறையும்.