Author Topic: காகம் தத்தி தத்தி நடப்பது ஏன்?  (Read 154 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226268
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/

ஆரம்ப காலங்களில் மற்றவர்களைப் போலவே காகங்கள் மற்றவர்களைப் போலவே சாதாரணமாக நடந்தன. இடையில்தான் அவற்றின் நடைப்பழக்கம் மாறிப் போனது. அது எப்படி என்பது பற்றியே இக்கதை.

பசுமைவனம் காட்டுப்பகுதியில் காகம் கருப்பையன் தலைமையில் காகக் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது.

பசுமைவனம் பெயருக்கு ஏற்றாற் போல் பச்சை பசேல் என பசுமையாக மரங்கள் அடர்ந்து செடி கொடிகள் நிறைந்து இருந்தது.

அந்த வனத்தின் நடுவே அழகான குளம் ஒன்று இருந்தது. காகங்கள் குளத்தின் அருகே இருந்த மரங்களில் வசித்தன.

ஒருநாள் அந்த குளத்திற்கு அன்னப்பறவை கூட்டம் ஒன்று வந்தது. அன்னங்கள் குளத்தின் நீரில் குதித்து விளையாடி மகிழ்ந்தன. குளக்கரையில் மிகவும் நளினமாக நடந்தன.

அன்னங்களின் நடையைப் பார்த்து காக கூட்டம் தங்களை மறந்தன. காகங்கள் அன்னங்களைப் போல தாங்களும் நடக்க வேண்டும் என்று எண்ணின. அன்னங்களின் நடையை உற்றுக் கவனித்தன. பின் நடக்க ஆரம்பித்தன.

ஒருநாள், இரண்டு நாட்கள் அல்ல. இரண்டு மாதங்கள் ஆனபின்பும் அன்னங்களின் நடையை காகங்களால் பழக இயலவில்லை. ஆதலால் அவைகள் தங்களின் பழைய நடையை நடக்க எண்ணின.

ஆனால் காகங்களுக்கு தங்களின் பழைய நடையும் மறந்து போனது.

தன்நடையும் மறந்து அன்ன நடையையும் நடக்க இயலாமல் காகங்கள் தத்தி தத்தி நடக்க ஆரம்பித்தன.

நாம் ஒருவரிடமிருந்து ஏதேனும் ஒன்றைப் பின்பற்ற நினைக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்; மேலும் நம்மிடம் இருக்கும் பழக்கத்தை மறந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதை இதன் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.