Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதால் ஏற்படும் நன்மைகள்....
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதால் ஏற்படும் நன்மைகள்.... (Read 34 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226083
Total likes: 28520
Total likes: 28520
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதால் ஏற்படும் நன்மைகள்....
«
on:
October 27, 2025, 07:56:31 AM »
மகாபாரதத்தின் இறுதிக்கட்டம். பீஷ்மர் அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர் நோக்கிப் படுத்திருக்கிறார். கர்ணனும் வஞ்சனையால் கொல்லப்படுகிறான்.
குந்திதேவி கர்ணனை மகனே என்றழைத் து துக்கம் அனுஷ்டிக்கிறாள். கர்ணனுடை ய மனைவியும் அவன் உடல்மேல் விழுந்து கதறுகிறாள். இவர்களோடு இன்னொரு பெண்மணியும் கர்ணனுக்காக அழுதாள்.
அதைகண்ட தருமபுத்திரர் கிருஷ்ணனை ப் பார்த்து, "இவள் யார்? இவள் ஏன் அழுகிறாள்?'' என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர், "இவள் தர்ம தேவதை. இனி உலகில் தர்மமே இருக்கப் போவதில்லை.
தர்மம் செய்வதற்கென்றே பிறந் தவன் கர்ணன். அவனே போய்விட்ட பிறகு பூமியில் எனக்கென்ன வேலை என்று உலகை விட்டுப்போகிறாள் அவள்'' என்றார். தர்மபுத்திரரைப்பயம் சூழ்ந்து கொண்டது.
காரணம்- பாண்டவர்களுடைய பேரனான ஜெனமேஜெயன் ஆளும்போது இந்த நாட்டில் தர்மம் இருக்காதாஎன்கிற பயம்தான் அது. "தர்மம் மீண்டும் செழிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?'' என்று பரந்தாமனை தர்மர் கேட்க, பரந்தாமனோ "அம்புப் படுக்கை யில் படுத்திருக்கும்பீஷ்மரைக் கேள்; அவர் சொல்வார்'' என்றார்.
பீஷ்மரும் தர்மதேவதை உலகை விட்டு ச் சென்றதால் ஏற்படப் போகும் அவலங்க ளைச் சொல்கிறார்: "இனி உலகம் செழிப் புற்று விளங்காது. தேசங் கள் ஒவ்வொன் றும் அநியாயமாக சண்டையிட்டு அழியும். அரசர்கள் நீதிமான்களாக இருக்க மாட்டார்கள். அவர்களிடம் பணிபுரியும் அமைச்சர்கள் முதல் பணியாட்கள் வரை ஊழல் செய்து, மக்களை வாட்டி தவறான வழியில் தனம் சேர்ப்பார்கள்.
அரசனிடம் நல்ல வற்றிற்கு நீதி கிடைக் காது. குருமார்கள் தங்கள் சீடர்களுக்கு ஒழுங்காகப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள்; சீடர் களும் ஒழுங்காக படிக்க மாட்டார்கள். படித்தவன் சூதும் வாதும் செய்வான். மழை பொழியாது; நிலங்கள் விளைச்சலைக் கொடுக்காது; பஞ்சமும் பட்டினி யும் தலைவிரித்தாடும்.
கணவன்மார்கள் தங்கள் மனைவியைச் சரிவர காப்பாற்ற மாட்டார்கள்; மனைவி மார்களும் பதிவிரதையாக இருக்க மாட்டா ர்கள். அவர்களின் குழந்தைகள் தவறான வழியில் நடக்கும்...
''இப்படி பீஷ்மர் சொல்லச் சொல்ல பாண்டவர்கள் பயந்தார்கள். இதிலிருந்து தங்கள் சந்ததியினர் தப்பிப்பது எப்படி என்று கேட்டார் கள். "அதை ஸ்ரீ கிருஷ்ண னே சொல்லுவார்'' என்று பீஷ்மர் கை காட்ட, கிருஷ்ணனோ, "நீங்கள் பிதாமகர். நான் சொல்லுவதைவிட உங்கள் நாவிலிருந்தே நல்ல வார்த்தைகள் புறப் படட்டும்'' என்று சொன்னார்.
அப்போது புறப் பட்டவைதான் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம். அதாவது, எம்பெ ருமான் ஸ்ரீமந் நாராயணனை ஆயிரம் பெயர் சொல்லி அர்ச்சித்து அவன் மனம் குளிர வேண்டினால் தர்மம் மீண்டும் தழைக்கும் என்பதுதான் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமை.பகவானுக்கு ஆயிரம் பெயர்கள் உண்டா என்று நாம் வியப்படையலாம்.
சாதாரண மனிதனாகிய நமக்கே பாலசு ப்பிரமணியன் என்று பெயர் வைத்தால், பாலா, பாலு,சுப்பிரமணி, சுப்பி, மணி, மணியன் என்று பல பெயர்களால் அழை க்கும்போது, பகவானுக்கு ஆயிரம் பெயர் கள் இருக்காதா என்ன? இந்த ஆயிரம் பெயர் களைச் சொல்லி, பகவானை வேண்டினால் கொஞ்சமாவது தர்மம் பிழைக்கும் என்பது பீஷ்மர் வாக்கு.
உடனே பார்வதிதேவிக்குச் சந்தேகம் வந்து விட்டது. அவள் சர்வேஸ்வரனான தன் கணவனைப் பார்த்து, ""சுவாமி, இது எப்படி சாத்தியமாகும்? ஆயிரம் நாமங்கள் சொல்லி அதனால் தர்மம் தழைக்கும் என் றால், அந்த நாமங்களை பண்டி தர்களால் சொல்ல முடியலாம்; படித்தவர்களால் சொல்ல முடியலாம். ஆனால் படிக்காத ஒருவன் தர்மம் தழைக்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் பெயர்களை நினைவில் வைத்துக் கொண்டு சொல்ல முடியுமா?'' என்று கேட்டாள்.
ஈஸ்வரன் புன்னகைத்தார்."தேவி... நீ சொல்வது சரிதான். ஏதுமறியாத ஒருவன் ஆயிரம் பெயர் சொல்லி திருமாலை வேண்டுவது நடக்காத காரியம்தான். ஆனால் அதற்கும் ஓர் வழி உண்டு.
"ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோ ரமேஸஹஸ்த்ர நாம தந்துல்யம் ராம நாம வரானனே'- இப்படி மூன்று முறை சொன் னால் போதும். சஹஸ்ர நாமம் சொன்ன பலனை அடையலாம்'' என்று பார்வதிதே வியின் சந்தேகத்தை நிவர்த்தி செய்தார் ஈஸ்வரன்.
சரி; இப்படிச் சொல்வதால் நமக்கு என்ன பலன் கிடைக்கும்? என்று கேட்கலாம். மரா... மரா... மரா... என்று சொல்லியே ராமநாமத்தை உச்சரித்த வேடனும் திருடனுமாக இருந்தவனே வால்மீகி மகரிஷியாக உயரவில்லையா? அது தான் ஸ்ரீராம நாம மகிமை.
மேலும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும், அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களும் சொல்லலாம். முழு மனதோடு பகவானைச் சரணாகதி அடைந்தால்பலன்களை அவன் தருவான்.
பேய், பிசாசுகள் அண்டாது. வியாதிகள் அணுகாது. வைத்தியர்கள் கைவிட்ட தீராத நோயும் தீரும். சுகப்பிரசவம் சரியாக நேரும். நோயாளிகளின் காதருகே அவர்கள் மனம் கேட்கும்படியாக சஹஸ்ர நாமப் பாராயணம் செய்வது மிக மிக உத்தமம். மேலும் தர்மங்களும் தழைக்கும்.
ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதர், ஸ்ரீராமானு ஜர், ஸ்ரீதேசிகன், ஸ்ரீமத்வாச்சாரியார், ஸ்ரீ ராகவேந்திரசுவாமிகள் போன்ற மகான்க ள் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமத்திற்கு மிக அருமையான பாஷ்யங் கள் (பதவுரை- பொழிப்புரை) எழுதியிருக்கிறார் கள். இதிலிருந்தே இதனுடைய பெருமையை அறியலாம்.
சமஸ்கிருத மொழியைச் சரியாக உச்சரி த்துச் சொல்ல வேண்டும். இல்லையேல் பாரத ரத்தினமாய் விளங்கிய எம்.எஸ். சுப்பு லட்சுமி அவர்கள் இசைத்த ஸ்ரீவிஷ் ணு சஹஸ்ர நாம ஒலிநாடாவையோ குறுந்தகட்டையோ தினமும் காலையில் நமது வீடுகளில் ஒலிக்கச் செய்வதன் மூலம் நாம் சகல சௌபாக்கியங்களுடன் வாழலாம். பலருடைய வாழ்விலும் இப்படி கேட்டு நன்மைகள் விளைந்திருக்கின்றன
"பரித்ராணாய ஸாதுநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் !!தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே !!
நான் அனைவரும் விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்து விஷ்ணுவின் அருளை பெறுவோமாக .
ஓம் நமோ நாராயணாய...
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்....
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதால் ஏற்படும் நன்மைகள்....