Author Topic: கோழி வந்ததா? முட்டை வந்ததா?  (Read 108 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226269
  • Total likes: 28729
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/

கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆராய்ச்சியாளர்கள்...

கோழி முதலில் வந்ததா? அல்லது முட்டை வந்ததா? என்ற கேள்வி பல நூற்றாண்டுகளாக மக்களைக் குழப்பும் ஒரு கேள்வியாக இருந்து வருகிறது. இந்த ஒரு கேள்வி விவாதம், நகைச்சுவை, அறிவியல் ஆராய்ச்சி என பலவற்றையும் தாண்டி மக்களை நீண்ட காலமாக யோசிக்க வைக்கும் ஒரு விஷயமாக உள்ளது. இதற்கான பதிலை கண்டறிய நாம் கோழிகளின் பரிணாம வளர்ச்சியை பார்க்க வேண்டும் என்கின்றனர் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள். சிலர் முட்டையிலிருந்து தான் கோழி வந்தது என்று சொல்வார்கள். சிலர் கோழியிலிருந்து தான் முட்டை வந்திருக்கும் என்று சொல்வார்கள். எப்படிப் பார்த்தாலும் விடை தெரியாமல் இருந்த இந்த கேள்விக்கு தற்போது ஆராய்ச்சியாளர்கள் விடையைக் கண்டுபிடித்துள்ளனர்.

பெரும்பாலான விலங்குகள் மற்றும் உயிரினங்கள் "Oviparous" அல்லது "Viviparous" ஆகிய இரண்டில் ஒன்றாகத்தான் இருக்கும். Oviparous என்பது முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் உயிரினங்களை குறிக்கிறது. Viviparous என்பது குட்டியிடும் உயிரினங்களை குறிக்கிறது. முதல் ஆம்னியோட் தோன்றியதிலிருந்து முட்டைகள் உள்ளன. ஆம்னியோட் என்பது முட்டையிடும் பறவை இனங்களை குறிக்கிறது. ஆரம்ப காலத்தில் விலங்குகள் தண்ணீரில் முட்டையிட்டன. இந்த முட்டை மிகவும் மென்மையாக இருந்தது, அதாவது தற்போது இருக்கும் ஓடுகளை போல் அல்லாமல் ஜெல்லி போன்ற முட்டை இருந்தது. இதன் காரணமாக விலங்குகள் தண்ணீரில் முட்டையிட்டு கருவைக் காத்தன. அதன் பிறகு பரிணாம வளர்ச்சியின் காரணமாக இந்த ஆம்னியோடிக் முட்டைகள் பெரும் மாற்றத்தை கண்டது. இந்த முட்டைகள் மேலும் 3 கூடுதல் சவ்வுகளை உருவாக்கியது. அவை கோரியன், அம்னியன் மற்றும் அலன்டோயிஸ். இதன் காரணமாக முட்டையிடும் ஆம்னியோட்கள், நிலத்தில் முட்டையிட ஆரம்பித்தன காரணம் முட்டைக்கு மேல் ஓடு உருவானது.

முதல் கோழியின் வருகை: ஆஸ்திரேலிய அகாடமி ஆஃப் சயின்ஸ்-இன் தகவல் படி, முதல் கோழி மரபணு மாற்றம் மூலம் தோன்றியது. இரண்டு புரோட்டோ-கோழிகள் இனச்சேர்க்கை செய்து, முதல் கோழியை உருவாக்கின. இந்த செயல்பாட்டின் போது மரபணு மாற்றங்கள் ஏற்பட்டன, இது முதல் கோழியின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது என்று கூறியுள்ளனர். அம்னியோட்டிக் முட்டைகள் சுமார் 340 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றின. அதேசமயில் கோழிகள் சுமார் 58,000 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து மட்டுமே வந்துவிட்டன என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது. கோழிகள் இருப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இந்த முட்டைகள் பல்வேறு விலங்கு கருக்களை வளர்க்க உதவியுள்ளதால், கோழிகளை விட முட்டைகள் தான் முதலில் வந்தது என கூறப்படுகிறது. இருப்பினும், கோழிகளின் முட்டைகளை உருவாக்க முக்கிய பங்கு வகிக்கும் ஒரு புரதத்தை கோழிகள் கொண்டுள்ளன. இந்த புரதம், ovocleidin-17 (OC-17) என்று அழைக்கப்படுகிறது. ஓவோக்ளிடின்-17 (OC-17) எனப்படும் இந்த புரதம் கோழியின் கருப்பையில் மட்டுமே உள்ளது. 24 மணி நேரத்திற்குள் உருவாக்கப்படும் முட்டை ஓடுகளை உருவாக்குவதற்கு OC-17 இன்றியமையாதது என்பதால் கோழிகள் முதலில் வந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர். கோழிகளை விட முட்டைகள் முந்தையவை என்றாலும், கோழி முட்டைகளின் உற்பத்திக்கு OC-17 தேவைப்படுகிறது. இன்றைய முட்டைகள் ஆரம்பகால பறவைகள் உற்பத்தி செய்த முட்டைகளிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றன. எனவே சில விஞ்ஞானிகள் கோழியிலிருந்து முட்டை வந்ததாக கூறுகின்றனர் சிலர் முட்டையிலிருந்து கோழி வந்ததாக கூறுகின்றனர்.