Author Topic: கூட்டமாக இருந்தாலும் ஒருவரை மட்டும் கொசு கடிக்க என்ன காரணம்?  (Read 14 times)

Offline MysteRy


கூட்டமாக அமர்ந்திருக்கும்போது ஒருவரை மட்டும் கொசு கடித்து கொண்டே இருக்கும். அப்போது அருகில் உள்ளவர்கள் உன்னுடைய ரத்தம் அந்த கொசுவிற்கு பிடித்திருக்கிறது. ஆகையால் தான் உன்னை கடிக்கிறது என்று விளையாட்டாக கூறுவார்கள். தற்போது இது உண்மை என ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இதனை மெடிக்கல் எண்டொமொலஜி இதழ் வெளியிட்டுள்ளது. கொசுக்களுக்கு O (ஓ) வகை ரத்தம்தான் மிகவும் பிடிக்கும் பிடிக்குமாம். மற்ற வகை ரத்தம் கொண்டவர்கள் ஒரு முறை கொசு கடிக்கிறது என்றால் 'ஓ' வகை ரத்தம் உள்ளவரை இரண்டு முறை அல்லது மூன்று முறை கடிக்குமாம்.

கொசுக்களுக்கு கார்பன்-டை-ஆக்சைடு மிகவும் அவசியம். கார்பன்-டை-ஆக்சைடு யாருடைய உடலில் இருந்து அதிகமாக வெளியேறுகிறதோ, அவர்கள்தான் கொசு அதிகளவில் கடிக்குமாம். இவற்றை கொசுக்கள் கண்கள் வழியாகவே கண்டறிவதாக ஆராய்ச்சியாளர் எஃப். டே கூறியுள்ளார்.

கொசுக்கள் தரையில் அமர்ந்திருந்து உற்றுநோக்கி பின்னரே உங்கள் மீது அமர்ந்து கடிக்குமாம். அதைப் போல் கருப்பு, கருஞ்சிவப்பு நிறம் கொண்ட ஆடைகளை அணிந்தால் விரைவில் உங்களை கொசுக்கள் கடிக்கும். கொசு உங்களை அதிகளவில் கடிக்க உங்களுடைய ஆடை முக்கிய காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.