Author Topic: பொல்லு போட்ட உடையார் கதை கிராமங்களில் பிரபலம்...  (Read 28 times)

Offline MysteRy


முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்தில் செல்வ செழிப்புடன் உடையார் ஒருவர் இருந்தார். அவருக்கு திமிரும் அதிகமாகவே இருந்தது. அவ்வூரில் நடக்கும் திருமண விழாக்களுக்கு தான் செல்ல மாட்டார். ஓர் வேலையாளிடம் கைத்தடி ஒன்றை கொடுத்து விட்டு பணமும் கொடுத்து விடுவார். அவன் கைத்தடியை [பொல்லு] பந்தலில் போட்டு விட்டு பணத்தையும கொடுத்து விட்டு செனறு விடுவான்.

ஒருநாள் உடையாரின் மகளுக்கு திருமணம் நிச்சயமாகியது. உடையார் வீட்டு திருமணமல்லவா ஊருக்கே அழைப்பிதழ் அனுப்பினார். ஊருக்கே உணவளிக்க உடையார் வீட்டில் தடபுடல் ஏற்படுகள் . திருமணத்தின் போது உடையாருக்கு அதிர்ச்சி. மண்டபத்தில் யாரையும் காணவில்லை. ஆனால் ஓர் குவியல் கைத்தடி மட்டுமே இருந்தது. அப்போதுதான் உடையாருக்கு புரிந்தது தான் செய்த தவறு.

ஆமா இப்ப இந்த கதையை நான் ஏன் சொன்னேன்?
🤔🤔🤔🤔

ஆ...... முகநூலும் அப்படித்தான் .
'லைக்' போட்டால் 'லைக்' கிடைக்கும்.
'கமென்ட்' போட்டால் 'கமென்ட்' கிடைக்கும் அப்படித்தானே....
😉😉😉😉😉